காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நதிநீர் பிரச்சினையில் என்ன செய்தார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி விடுத்துள்ளார்.
மதுரையை அடுத்த பேரையூரில் அரசின் சாதனை விளக்க தொடர் ஜோதி நடைபயணத்தின் போது ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று கூறினார். மேலும், அதிமுக தலைவர்கள் மக்களால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் என்றார்.