Monday , 20 November 2017
Home » முக்கிய செய்திகள்: » தொடர்ந்து முதலிடம் ; ரஃபேல் நடாலுக்கு உலக நம்பர்1.கோப்பை …

தொடர்ந்து முதலிடம் ; ரஃபேல் நடாலுக்கு உலக நம்பர்1.கோப்பை …

downloadஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆண்டு இறுதி வரை முதலிடத்தில் நீடித்ததற்காக உலக நம்பர்1 (World No.1) கோப்பையை பெற்றார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். 31வயதான இவர், இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும், சர்வதேச டென்னிஸ் தரவரிசையிலும் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆண்டு இறுதி வரை முதலிடத்தில் நீடித்ததற்காக உலக நம்பர்1 கோப்பை நடாலுக்கு வழங்கப்பட்டது. இந்த கோப்பையை ATP நிர்வாக தலைவர் கிறிஸ் கெர்மோட் (Chris Kermode), வழங்கினார். இதற்கு முன்னதாக, 2008, 2010 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் உலக நம்பர்1 கோப்பை நடால் பெற்றுள்ளார். 3முறை சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை இழந்து மீண்டும் முதலிடம் வந்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ரஃபேல் நடால். 30வயதைக் கடந்த ஒருவர் 4வது முறையாக இந்த கோப்பையை பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com