Friday , 19 October 2018
Home » மாவட்டம் » தேர்தல் களத்தில் தனித்து, போராடப்போகும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி!

தேர்தல் களத்தில் தனித்து, போராடப்போகும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி!

seemanஇறுதிவரை தேர்தல் களத்தில் தனித்து போராடப்போகும் இயக்கம் நாம் தமிழர் கட்சி தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழர் சீமான் கலந்து கொண்டு சிரப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஈழம் முதல் இமயம் வரை 1,800 ஆண்டு களுக்கு மேலான கரிகால சோழ னின் கொடி புலிக்கொடி. நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தமிழர்களுக்காகத்தான் போராடினார் என்று நினைவு கூர்ந்தார். நளினியின் விடுதலை மாநில அரசின் கைகளில் தான் உள்ளது என்று சொன்ன கருணாநிதி. ஆனால் அவர்களின் விடுதலையை இரண்டு முறை தி.மு.க.கட்சி தான் தடுத்தது என்று கூறினார். மேலும், இந்தியாவில் மரண தண்டனையே இருக்க கூடாது என்பது தான் தங்களது நிலைப்பாடு என்று தெரிவித்த சீமான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் இறுதி வரை தேர்தல் களத்தில் தனித்து போராட போகும் இயக்கம் நாம் தமிழர் தான் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிiணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் பேசும் போது, மாற்றத்தை உருவாக்கும் கட்சியாக என்றைக்கும் நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று தெரிவித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com