Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தேனீக்கள் கொட்டியதில் பொதுப்பணித்துறை ஊழியர் உயிரிழப்பு !! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » ஈரோடு » தேனீக்கள் கொட்டியதில் பொதுப்பணித்துறை ஊழியர் உயிரிழப்பு !!

தேனீக்கள் கொட்டியதில் பொதுப்பணித்துறை ஊழியர் உயிரிழப்பு !!

vlcsnap-2018-07-05-11h10m30s177ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணையில் தேனிக்கள் கொட்டியதில் பொதுப்பணித்துறை ஊழியர் உயிரிழந்தார். பொதுப்பணித்துறை பவானிசாகர் அணைக்கோட்டப்பிரிவில் பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ராமசாமி. இவர் இன்று மதியம் அணையின் மேல்பகுதியில் பணிக்கு சென்றுள்ளார். அணையின் மேல்மதகு பகுதியில் இருசக்கர வாகனத்தில் ராமசாமி சென்றபோது பறந்து வந்த தேனீக்கள் முகத்திலும் கைகால்களிலும் கொட்டின. இதனால் வலிதாங்காமல் ராமசாமி கத்தியதால் அருகிலிருந்த ஊழியர்கள் உடனடியாக வந்து ராமசாமியை மீட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜீப்பில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com