Tuesday , 22 January 2019
Home » இந்தியா » தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியது!

தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியது!

nirmala seetharaman-தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகின்றது. ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று பாஜக தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில், தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியதாகவும், எதிர்பார்த்த பணம் கிடைக்காததுதான் இதற்கு காரணம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் நடந்த காரசார விவாதத்தின் போது நிர்மலா சீதாராமன், இக்குற்றச்சாட்டை முன் வைத்தார். முதல் ரபேல் விமானம் இந்தியாவுக்கு வரும் செப்டம்பர் மாதம் வந்து சேரும் என்றும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து 36 ரபேல் விமானங்களும் வந்து சேரும் என்றும் உறுதியளித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com