Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி  செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திருவள்ளூர் » தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி  செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்!!

தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி  செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்!!

vlcsnap-2018-07-05-10h39m03s521சென்னை புறநகர் பகுதியில் உள்ள வண்டலூர்- மீஞ்சூர் அடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மதுரவாயல்- தாம்பரம் தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.இங்கு இருசக்கர வாகனங்கத்தில் செல்பவர்களை பின் தொடரும் மர்ம நபர்கள் கண் இமைக்கும் நொடியில் அவர்கள் அணிந்து இருக்கும் தங்க நகை மற்றும் செல்போனை பறித்து சென்று வந்தனர். கடந்த வாரம் 400 அடி வெளிவட்ட சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற டெய்சிராணி என்ற பெண்ணிடம் 12 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.இதனை தொடர்ந்து மதுரவாயல்- தாம்பரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் வண்டலூர்- மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரண்டு சாலையையும் குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ச் 400 அடி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது சந்தேகமளிக்கும் வகையில் வந்த இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரை மடக்கினர்.அப்போது அவர்கள் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததோடு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அவர்களை துரத்தி சென்று பிடித்த காவல்துறையினர் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சங்கர்ஃ27 இபிரபாகரன்ஃ23இ கொல்லச்சேரியை சேர்ந்த பிரபு மற்றொருவன் பூவிருந்தவல்லியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து சென்னை புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 10 சவரன் தங்க சங்கலிஇ 6 இருசக்கர வாகனம் இ10 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.மேலும் இவர்கள் வழிப்பறியில் ஈடுபட 6 வாகங்களையும் திருடியுள்ளதும் திருடிய வாகனத்தை தங்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு வாடகைக்கு விட்டது தெரியவந்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com