தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 200 சட்டசபை தொகுதிகளில், 4 அரை கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் சட்டசபை தொகுதியில், பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திடீரென மரணமடைந்தார். அங்கு தேர்தல், தள்ளி வைக்கப்பட்டு உள்ளதையடுத்து, 199 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 2,247 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதேபோன்று, தெலுங்கானாவில், மொத்தம், 119 சட்டசபை தொகுதிகளில் 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றன. பா.ஜ.க கட்சி 118 இடங்களில் போட்டியிடுகிறது. இரு மாநிலங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.