Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தென் மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீர்த்த மழை..! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடு » தென் மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீர்த்த மழை..!

தென் மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீர்த்த மழை..!

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை:

நெல்லையில் பாளையங்கோட்டை, பேட்டை, சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததது.

நெல்லையில் 83 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி பகுதியில் 100 மில்லி மீட்டர் அளவுக்கும் மழை அளவு பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதில் மின்சார வாரிய அலுவலகத்துக்குள் மழை நீர் புகுந்து தேங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

இதேபோல் திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடிந்துள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டாரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் பாய்கிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஐந்தருவி, பழைய குற்றால அருகளில் சீராக தண்ணீர் கொட்டுவதால் அங்கு மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com