Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » தென்காசி அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில்இருதரப்பினரிடையே மோதல்

தென்காசி அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில்இருதரப்பினரிடையே மோதல்

5செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தை காவல்துறையினர் லேசான தடியடி செய்து கலைத்தனர்.நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையில் ஒரு தரப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்நிலையில் செங்கோட்டை மேலூர் வழியாக கீழ பள்ளிவாசல் அருகே கொண்டு வரும் போது அந்தபகுதியை சேர்ந்த சில இஸ்லாமியர்கள் இந்த வழியாக சிலையை எடுத்து வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லேசான தடியடி செய்து கலவரத்தை நிறுத்தினர். பின்னர் இப்பகுதியை காவல்துறை கண்கணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆய்வு செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com