Thursday , 20 September 2018
Home » இந்தியா » தூய்மையே உண்மையான சேவை புதிய திட்டம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

தூய்மையே உண்மையான சேவை புதிய திட்டம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

2தூய்மையே உண்மையான சேவை என்ற பெயரில் புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காந்தி பிறந்த 150-வது ஆண்டு விழா 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்பாக வரும் 15-ம் தேதி தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை தொடங்குகிறோம் என்றும் அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி, இது தேசத்தந்தைக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com