Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் சிலை அவமதிப்பை கண்டித்து பாவூர்சத்திரத்தில் நாடார் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » தூத்துக்குடி » தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் சிலை அவமதிப்பை கண்டித்து பாவூர்சத்திரத்தில் நாடார் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் சிலை அவமதிப்பை கண்டித்து பாவூர்சத்திரத்தில் நாடார் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்

vlcsnap-2015-03-23-09h50m02s12தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் சிலை அவமதிப்பை கண்டித்து பாவூர்சத்திரத்தில் நாடார் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தென் மாவட்டங்களில் அமைதி திரும்ப வலியறுத்தியும் தெஷ்ண மாற நாடார் சங்கம் மற்றும் அனைத்து நாடார் அமைப்புகளின் சார்பில் நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் பேரூந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து சார் பதிவாளர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் தென்காசி- நெல்லை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உடைக்கப்பட்ட காமராஜர் சிலைக்கு பதில் மீண்டும் அதே பகுதயிpல் சிலை நிறுவ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் தொடரும் என்று அறிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திரும்பி சென்று கொண்டிருக்கும் போது பாவூர்சத்திரம் பேரூந்து நிலையம் அருகே செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேரூந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com