Monday , 20 November 2017
Home » சினிமா » துபாயில் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா…

துபாயில் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா…

rajinikanth-2-0-movie-first-look-posterரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27-ம் தேதி பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘2.0’ உருவான விதம் மற்றும் 3டி பணிகளுக்கான வீடியோ பதிவுகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. மேலும், வருகிற  27-ம் தேதி இசை வெளியீட்டை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினரும் துபாய் செல்ல உள்ளனர்.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார்  400 கோடி ரூபாய் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை 2018-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com