Monday , 23 October 2017
Home » உலகம் » தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் மீட்பு …

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் மீட்பு …

Daily_News_2017_8929668664933ஏமனில் கடந்த 2016 மார்ச் மாதத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் விடுவிக்கப்பட்டதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது. இதை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் உறுதிப்படுத்தி உள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த தாமஸ் உழுன்னாலில், ஏமனின் பழமையான ஏடன் நகரில் கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொண்டு நிறுவனத்தின் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

அப்பொழுது உழுன்னாலிலை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். ஓராண்டுக்கு மேலாகியும் அவரைப்பற்றிய எந்த தகவலும் தெரியாத நிலையில், பாதுகாப்பாக அவரை மீட்க மத்திய அரசுக்கு தொண்டு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், பாதிரியார் உழுன்னாலில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஓமன் நாட்டு அரசு நேற்று தெரிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். விரைவில் அவர் நாடு திரும்புவார் என்றும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com