கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம்.இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி மாணவி ரக்ஷனா மனு அளிக்க வந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர்,நேற்று மதியம் 3-மணி அளவில் அமராவதி ஆற்றில் குளித்து கொண்டிருந்த மாணவன் சபரீசன் தண்ணீரில் மூழ்கினான்.இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அமராவதி ஆற்றில் நேற்று இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. மீண்டும் இன்று காலைமுதல் தேடி வந்தனர்.ஆயினும் 12-மணி நிலவரப்படி மாணவனை மீட்கமுடியவில்லை.இதற்கு காரணம் தீயணைப்பு துறையினரிடம் மினி மோட்டார் படகு இல்லாததே காரணம் என்றும்,தற்போது தமிழகத்தில் உள்ள அணைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. கரூரை பொறுத்தவரை அமராவதி மற்றும் காவிரி ஆறுகள் மிக அருகிலேயே உள்ளது. தற்போது இரு ஆறுகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இதுபோல் இன்னும் பல்வேறு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும்,அதனை தடுக்கவும்,அவ்வாறு தவறுதலாக ஆற்று நீரில் யாரேனும் அடித்து செல்லப்பட்டால் அவர்களை மீட்க சிறிய மோட்டார் படகுகள் உதவும் என்றும்.இதன் காரணமாகவே மாவட்ட ஆட்சியரை சந்தித்து தீயணைப்பு துறையினருக்கு மினி மோட்டார் படகு வாங்கி தர வலியுருத்தி மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
Home » மாவட்டம் » கரூர் » தீயணைப்பு துறையினருக்கு மினி மோட்டார் படகு வாங்கி தர வலியுருத்தி மனு மாவட்ட ஆட்சியரிடம் மனு