Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு » தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது!

தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது!

download (2)பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெறுகிறது.
தி.மு.க. உட்கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்வேறு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கனிசமான அளவு வாக்குகளை பெற்ற தி.மு.க. புதிய எழுச்சியுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தி.மு.க. தலைமையில் பலமான அணியை அமைக்கவும், மாவட்ட பகுதிகளில் தி.மு.க.வின் வாக்குவங்கியை பலப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.
இதற்கிடையே, தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கட்சியின் முன்னணி தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com