Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
திருநெல்வேலி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உள்பட இருவர் பலி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திருநெல்வேலி » திருநெல்வேலி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உள்பட இருவர் பலி

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உள்பட இருவர் பலி

திருநெல்வே21 (6)லி அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துக்களில் இளைஞர் உள்பட இருவர் இறந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி மகன் சரவணன் (24). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்து வந்தார். 2 வாரங்களுக்கு ஒரு முறை விடுமுறையில் சொந்த ஊருக்கு சரவணன் வந்து செல்வது வழக்கம்.

வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து சரவணன், தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாராம். திருநெல்வேலி அருகே ஆலங்குளம் பிரதான சாலையில் அபிஷேகபட்டியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறியதில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலே இறந்தார். திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் முத்தையா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.

மற்றொரு விபத்து: பாளையங்கோட்டை தியாகராஜநகர் அடுத்துள்ள தாமிரபதி காலனியை சேர்ந்தவர் மோகன் (60). வெளிநாட்டில் வேலை செய்து வந்த மோகன் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாராம். வெள்ளிக்கிழமை மாலை

மோகன், தனது மனைவி மலர்செல்வி (55) உடன் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டாராம்.

அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோகன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மோகன் சனிக்கிழமை இறந்தார். இது குறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com