Thursday , 16 August 2018
Home » மாவட்டம் » திருச்சிராப்பள்ளி » திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் 19 பேரரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் 19 பேரரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

Tiruchyதிருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பாளர்கள் மூர்த்தி, எட்வர்ட், அனீஸ்பாத்திமா, சுங்கத்துறை ஆய்வாளர் பிரசாந்த் கவுதம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் 70 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. திருச்சி விமான நிலையம் வழியே தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் நடந்த சோதனையில் ரூபாய் 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிபிஐ சோதனையில் தங்கக்கட்டிகள் மற்றும் தங்க நகைகளும் ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com