Monday , 18 February 2019
Home » தமிழ்நாடு » திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,கூடுகிறது அவசர செயற்குழு கூட்டம்!

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,கூடுகிறது அவசர செயற்குழு கூட்டம்!

mk-stalin-write-lettersதி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானார். இந்நிலையில், செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. செயற்குழு உறுப்பினர்களுடன், தலைமைக் கழக நிர்வாகிகளும் இதில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com