Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
திண்டிவனம் அருகே சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திண்டிவனம் அருகே சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திண்டிவனம் அருகே சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

vlcsnap-2015-03-17-10h10m54s1திண்டிவனம் அருகே சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொள்ளார், பெலாகுப்பம், வெண்மணியாத்தூர் ஆகிய பகுதிகளில் 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக அக் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர். விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், விளை நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக் கோரி கொள்ளார், பெலாக்குப்பம், வெண்மாணியாத்தூர் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் சம்பத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவி;ல், விளை நிலங்களில் சிப்காட் தொழிற்சாலை அமைத்தால் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், தொழிற்சாலை நீரால் குடிநீர் பாதிக்கப்படும். இதனால் 50 கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com