Monday , 18 February 2019
Home » உலகம் » தாய்லாந்தில் குகையில் சிக்கிய, 8 சிறுவர்கள் உயிருடன் மீட்பு!

தாய்லாந்தில் குகையில் சிக்கிய, 8 சிறுவர்கள் உயிருடன் மீட்பு!

985607தாய்லாந்தில் குகையில் சிக்கிய 8 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து மீதமுள்ளவர்கள் இன்று மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் குகையில் இருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ச்சியாங் ராய் மாகாணத்தில், 12 இளம் கால்பந்து வீரர்கள், ஒரு பயிற்சியாளர் சிக்கிய தாம்லுவாங் குகையில் இரண்டாம் கட்ட மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு வாரங்களுக்கு மேலாக உள்ளே சிக்கி இருப்பவர்களில் 8 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மீட்புப் பணிகளை அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதமாக நடத்தும் படி கேட்டுக் கொண்டார். இன்று நடக்கும் 3ம் கட்ட மீட்புப் பணியின் போது 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் மீட்கப்படுவார்கள் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com