Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழ்நாடு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 9
Thursday , 7 July 2022
Home » தமிழ்நாடுpage 9

தமிழ்நாடு

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜான்குமார் எம்.எல்.வாக பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஜான்குமார் எம்.எல்.வாக பதவியேற்று கொண்டார். சட்டமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜான்குமாருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். Read More »

சொத்துக்காக 13 வயது சிறுமியை கொலை செய்தவர் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமியை சொத்துக்காக கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வேதவல்லி என்பவர், தனது தம்பி இறந்துவிட்டதால் அவரது 13 வயது மகளை தன்னுடன் வைத்து வளர்த்துவந்தார். இதனிடையே கடந்த 29ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சிறுமி உடலில் 18 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்ததையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், வேதவல்லியின் மகனான பாபு கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், அந்த சிறுமி இருப்பதால் ... Read More »

சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் அடுத்த மாதம் 18ந்தேதி வரை 48 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 3ஆயிரத்து 130 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு ... Read More »

பணம் என்ற கிளுகிளுப்பை காட்டி அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது: ஸ்டாலின் பேச்சு

சென்னை: பணம் என்ற கிளுகிளுப்பை காட்டி அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திருமண விழாவில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது, ‘ ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை, ஆனால் அதற்கு முதலமைச்சர் கோபப்படுகிறார் என குற்றம் சாட்டினார். எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படுவேன் என சட்டசபையில் சொன்னேன், அதன்படியே நடக்கிறேன் என்று கூறினார். 2 இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் இந்த வெற்றி தொடராது. உள்ளாட்சி தேர்தலில் ... Read More »

தமிழ்நாடு நாள் இன்று…. உற்சாக கொண்டாட்டம்

மொழிவாரி அடிப்படையில் சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்து இயங்க தொடங்கின. அதேநாளில், தமிழகமும் தனி மாநிலமானது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்கள் இந்நாளை விசேஷமாகக் கொண்டாடிவரும் நிலையில், தமிழ்நாடு அரசும் இந்த ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைமைச்செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 தேதி ... Read More »

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணனும் வெற்றிபெற்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக, நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்எல்ஏக்களுடன் சென்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை ... Read More »

அதிதீவிர புயலாக மாறுகிறது “மஹா”..! தென் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள மஹா புயல், தீவிர புயலாக மாறியிருக்கும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, தென் தமிழ்நாட்டில், கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. கன்னியாகுமரி அருகே அரபிக்கடலில் உருவான மஹா புயல், லட்சத் தீவு பகுதிகளில் நிலவுகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வானிலை மையம், மஹா புயல், தற்போது தீவிரமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகளை ஒட்டி மையம் கொண்டுள்ள மஹா புயல், வடக்கு, வடமேற்கு ... Read More »

எம்எல்ஏக்கள் பதவியேற்பை முன்னிட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை

நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்எல்ஏக்களுடன் சென்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்எல்ஏக்கள் பதவியேற்பை முன்னிட்டும், “தமிழ்நாடு நாள்” முதல்முறையாக அரசு சார்பில் கொண்டாடப்படுவதை முன்னிட்டும், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திலும் அவர்கள் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா நினைவிட பணிகளையும், எம்ஜிஆர் நினைவிட புதுப்பிப்பு பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். Read More »

திருச்சியில் 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். திருச்சி காவிரி ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஒழுங்காற்று குழுவின் செயலாளர் குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உதவி இயக்குனர் ராம் பக்சிங், தமிழ்நாடு உட்பட 4 மாநில நீர்வள ஆதார அமைப்பின் தலைமை அதிகாரிகள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், மழைப்பொழிவு, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை ... Read More »

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி -கோவை நீதிமன்றம்

காற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கோவை, கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரிதாநாயர், ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com