Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழ்நாடு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 8
Thursday , 7 July 2022
Home » தமிழ்நாடுpage 8

தமிழ்நாடு

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழப்பு- 2 பேர் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டம் விட பயன்படுத்தப்படும் கண்ணாடி கூழ் கலவையால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் அறுபட்டு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இதுவரை பலர் பலியாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு டெல்லி தேசிய பசுமை தீப்பாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் நாடு முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து கடந்த 2016ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. எனினும், தடையை ... Read More »

சுற்றுலாத் தலங்களில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்..!

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் ஏராளமானோர் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்ததாலும், நேற்று விடுமுறை தினம் என்பதாலும் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுத்தனர். அங்குள்ள மலர்கோபுரத்தையும், பல வண்ண மலர்களையும் பார்த்து மகிழ்ந்தனர். அதேபோல், தொட்டபெட்டா சிகரம், கேத்தி பள்ளத்தாக்கு, அவலாஞ்சி அணை, முக்குறுத்தி சிகரத்தை பார்வையிட்ட பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் ... Read More »

லாரி மீது பேருந்து மோதல்… நடத்துநர் பலி, ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்…

சென்னையில் பாடி அருகே, சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது, அரசுப் பேருந்து மோதியதில் பேருந்தின் நடத்துனர் உயிரிழந்தார். ஒட்டுனர் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை தாதான்குப்பம் ரயில்வே மேம்பால சாலையில் பாடி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியுள்ளது. இதில் பேருந்தின் முன்பக்கம் சிதைந்து பலத்த சேதம் ஏற்பட்டது. நடத்துனர் வீரமுத்து என்பருக்கு தலை மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ... Read More »

இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படும் கல்லறை திருநாள்

தமிழகம் முழுவதும் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ பெருமக்களால் கடைபிடிக்கப்படும் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்தவ மக்களின் வழக்கப்படி இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் தங்களின் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளுக்கு செல்லும் கிறிஸ்தவ மக்கள் அதனை தூய்மைப்படுத்தி, மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்துவார்கள். அதன்படி நவம்பர் 2ம் தேதியான இன்று பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவ மக்கள் கல்லறை திருநாளை அனுசரித்து வருகின்றனர். Read More »

முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்றிரவு நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பிநாயர் பட்டர் பரிவட்டம் கட்டி, கோவர்த்தனாம்பிகையிடம் வேல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கோயில் ஸ்தானிகப்பட்டர், சுப்பிரமணியசுவாமிக்கு நவரத்தின சக்திவேலை அளித்து சிறப்பு தீபாராதனை செய்தார். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயத்தில் சூரசம்ஹார விழா கடந்த 28ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.நேற்றிரவு ஆலயத்திற்குள் எழுந்தருளிய முருகன் அன்னை ... Read More »

முதலமைச்சர் வீட்டருகிலேயே மலைபோல் குப்பைகள் – உயர்நீதிமன்ற நீதிபதிகள்

முதலமைச்சர் வீட்டருகிலேயே மலை போல குப்பைகள் குவிந்துள்ள நிலையில், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடிவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குப்பைகள் அகற்றப்படாததால் தான் டெங்கு நோய் பரவுவதாகக் குறிப்பிட்டனர். முதலமைச்சர் வீட்டுக்கு அருகில் மலைபோல குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், முதலமைச்சர் வீட்டருகிலேயே இந்த நிலை என்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என ... Read More »

அதிமுக அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா?-மு.க.ஸ்டாலின்

2 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவை, மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். விழாவில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2 தொகுதி இடைத்தேர்தலில் தோற்றாலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெறும் என்றும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றது என்று விமர்சித்த ... Read More »

மருத்துவர்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும்: வைகோ பேச்சு

சென்னை: மருத்துவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுகின்றனர். அவர்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும் என்று வைகோ பேசினார். ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பத உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து போராட்டத்தில் ... Read More »

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் கைதான வேலூர் மாணவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன்

மதுரை: நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் கைதான வேலூர் மாணவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆள் மாறாட்ட வழக்கில் இதுவரை, 4 மாணவர்கள், ஒரு மாணவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More »

எடப்பாடியை தொடர்ந்து 10 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 7-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்க புறப்படும் பன்னீர்செல்வம் 10 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட முக்கிய துறைகள் ஓ.பி.எஸ் வசம் உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com