Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழ்நாடு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 7
Tuesday , 17 May 2022
Home » தமிழ்நாடுpage 7

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக குறைந்தது

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக சரிந்ததால் நீர் திறப்பும் குறைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா, கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பல மழையால், மேட்டூர் அணை நிரம்பி தொடர்ந்து நீர்மட்டம் 120 அடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. இதனையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, ... Read More »

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கடும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் காலை கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிருடன், சாலை கண்ணுக்கு தெரியாதவாறு பனி சூழ்ந்து காணப்பட்டது. வாகன ஓட்டிகளும் எதிர்வரும் வாகனங்களை கண்டறிய பகலிலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். நெல்லை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. சாலைகளில் வெள்ளை நிற போர்வை போர்த்தியது போன்று ... Read More »

விடிய விடிய சோதனை… 50 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் விடிய விடிய சோதனை மேற்கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சுமார் 100 பேரிடம் இருந்து 50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்றிரவு அங்கு சென்ற 22 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்களது உடைமைகளையும் தீவிரமாக சோதனையிட்டனர். ... Read More »

வங்கக் கடலில் உருவாகும் புயல்

வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து தீவிர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று புயலாகவும் வலுப்பெறக்கூடும். தற்போதைய நிலவரப்படி இந்த புயல் சின்னம் வட மேற்கு திசையில் வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு ... Read More »

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரு பிரிவினர் இடையே மோதல்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை சிறப்பு உற்சவம் நடைபெற்றது. அப்போது தென்கலை ஐயங்கார்கள் பிரபந்தங்களை பாட முயற்சித்தபோது, நீதிமன்ற தடை உள்ளதால், பிரபந்தங்களை பாடக்கூடாது என வடகலை ஐயங்கார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் உருவானது. தகராறு முற்றியதால் தள்ளுமுள்ளு மற்றும் கைககலப்பில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தாசில்தார் கோவில் ... Read More »

சசிகலாவின் ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, பினாமி பரிவர்த்தனைகள் தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முடக்கப்பட்டுள்ள சொத்துகள் 2016ஆம் ஆண்டு நவம்பர்8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குப் பிறகு வாங்கப்பட்டவை என கூறப்படுகிறது. பினாமி பெயர்களில் இந்த சொத்துகளை சசிகலா வாங்கியதாக சொல்லப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் ஆப்பரேசன் கிளீன் மணி என்ற பெயரில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. அப்போது சசிகலா மற்றும் அவரது ... Read More »

அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அரபிக் கடலில் அதிதீவிர புயலாக மாறிய மஹா புயல் நாளை இரவு அல்லது 7ஆம் தேதி அதிகாலை குஜராத் அருகே கரை ... Read More »

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை – வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும், வியாபாரிகள் அதிகமாக கையிருப்பு வைத்திருந்தாலோ, அதிக விலைக்கு விற்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக திண்டுக்கல், திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரத்து குறைந்து கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் அங்கிருந்து விற்பனைக்கு வரும் பெரிய வெங்காயம் ... Read More »

மஹா’ புயல் வருகிற 6ந் தேதி குஜராத்தில் கரையைக் கடக்கும்

அரபிக் கடலில் உருவான “மஹா” புயல் அதிதீவிர புயலாக மாறி, வரும் 6-ம் தேதி குஜராத் மாநிலம் துவாரகா அருகே கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும்- விக்கிரமராஜா

ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி உடனடியாக அதிலிருந்து விலக வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். திருப்பத்தூர் நகர அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் 20-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- வெளிநாட்டு குளிர்பானத்தை முற்றிலுமாக விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் உள்ளூர் குளிர்பான குளிர்சாதன பெட்டிகளை கேட்டுள்ளோம். விரைவில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். வியாபாரிகளை ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com