Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழ்நாடு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 6
Tuesday , 17 May 2022
Home » தமிழ்நாடுpage 6

தமிழ்நாடு

நிரம்பி இருக்கும் பவானிசாகர் அணை – அணைக்கு வரும் நீரை உபரிநீராக வெளியேற்றம்

பவானிசாகர் அணை நிரம்பி இருப்பதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டி, கடல்போல காட்சியளிக்கிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2308 கனஅடியாக உள்ளது. ... Read More »

உள்ளாட்சித் தேர்தல்… அதிமுக விருப்பமனு அறிவிப்பு…

உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில், விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவிகள் வாரியாக விருப்ப மனுக் கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அதில், தமிழ்நாட்டில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட அனுமதி கோரும், கட்சி உறுப்பினர்கள், வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில், கழக அமைப்பு ரீதியாக செயல்படும் சம்பந்தப்பட்ட ... Read More »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்படுவதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ,021 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.61 அடியாகவும், நீர் இருப்பு 92.851 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 14 ,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. Read More »

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி.சஹி

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏ.பி.சஹி பதவியேற்பைத் தொடர்ந்து ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், ... Read More »

பாபர் மசூதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: திருமாவளவன் கருத்து

சென்னை: பாபர் மசூதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் மற்றும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More »

போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்

தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன் கமல்ஹாசன் பரமக்குடி: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று தனது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைத்து கூறியதாவது:- நான் சினிமா துறைக்கு வந்தபோது எனது தந்தை நீ மாலைநேர கல்லூரியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆகலாம் என கூறினார். அதற்கு நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் மற்றதெல்லாம் என்றேன். ... Read More »

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம். சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய கனைக்ட்-2019 மாநாட்டை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- ... Read More »

புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்

புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டு உள்ளது. ‘புல்புல்’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த புயல், அந்தமான் அருகே 400 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும். தொடர்ந்து ... Read More »

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெற உள்ளது. புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதால், சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். Read More »

வங்க கடலில் உருவானது “புல் புல்” புயல்

வங்க கடலில், அந்தமான் அருகே, நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது. புல் புல் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவியது. இது, நேற்று, மத்தியகிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று, புயலாக மாறியுள்ளது. இந்த ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com