Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழ்நாடு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 40
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடுpage 40

தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றது என ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் ... Read More »

தமிழ்நாடு தேர்வாணையத்தில் தமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லையா

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லை என கூறுவது வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தமிழக அரசுத்துறைப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வுசெய்யும் இரண்டாம் தொகுதிப் பணிகளுக்கானத் தேர்வுகள் சிலவற்றைத் தமிழில் எழுத முடியாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. செயலாளரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு கிராமப்புற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ... Read More »

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

பணமதிப்பிழப்பு செய்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி நாட்டில் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தை ... Read More »

ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவி பெருத்த திட்டம

தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7 ஆயிரத்து 728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி என்ற பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை சட்டசபையில் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகையை பதிவு ... Read More »

அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு

அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது தமிழகத்தில் பரவலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என நேரத்தை நிர்ணயித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் மக்கள் தமிழகத்தில் ஆர்வத்தில் அவரவர் இஷ்டப்படியே பட்டாசு வெடித்தனர். தடையை மீறியதாக நெல்லையில் 6-பேர் மீதும், கோவையில் 30-பேர் மீதும், திருப்பூரில் 42-பேர் மீதும், விழுப்புரத்தில் 30-பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். சில இடங்களில் விதிமுறைகளை ... Read More »

ரஜினிகாந்த் கட்சி தொடங்க மாட்டார்

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பரபரப்பான பேட்டி வருமாறு:- ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசரை நியமித்தபோது எல்லோரும் ஏற்றுக்கொண்டோம். ஆனால் அவரது நடவடிக்கைகள் செயல்பாடுகள் காங்கிரஸ் கலாச்சாரத்துக்கு ஒத்துவரவில்லை.மோடி வெளியே எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் நிலைமை என்ன? தமிழக பா.ஜனதாவுக்கு தமிழிசை சரியான தலைவர்தான். எதை கேட்டாலும் எதையாவது பேசுகிறார். தேர்தலில் எங்களுக்கும் ஊழல் கட்சியான அ.தி.மு.க.வுக்கும்தான் போட்டி. அ.தி.மு.க. டெபாசிட்டை இழக்கும்.தி.மு.க-காங்கிரஸ் வலுவான கூட்டணியாக உள்ளது. கமல் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை ... Read More »

20 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாது

நிலக்கோட்டையில் வருகிற 11-ந் தேதி அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:- நிலக்கோட்டை தொகுதியில் மட்டுமின்றி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளார். அதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என அ.தி.மு.க.வினர் நினைத்து ... Read More »

திண்டுக்கல் அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல் அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே திருப்பூரிலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும், தேனியில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கெங்குவார்பட்டியை சேர்ந்த 6 வயது குழந்தை ருத்ரா உட்பட 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 18க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து திண்டுக்கல் ... Read More »

3 நாட்களில் அரசு பேருந்துகளில் 5 லட்சம் பேர் பயணம்!

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் அரசு பேருந்துகள் மூலம் வெளியூர் சென்றுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக கடந்த 2-ந் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்தது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பயணிகள் கூட்டம் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் அலைமோதியது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ... Read More »

14-ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் அதிபர் சிறிசேன அறிவிப்பு!!

இலங்கை நாடாளுமன்றம் வருகிற 14ஆம் தேதி கூட்டப்பட உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவதற்காக, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ராஜபக்சே தரப்பு வாக்குறுதி அளித்துள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, கடந்த மாதம் 26ஆம் தேதி நீக்கப்பட்டு மகிந்தா ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை ஏற்காத ரணில்விக்கிரமசிங்;, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கபட வேண்டும் என வலியுறுத்தினார். போதிய ஆதரவு இல்லை என்பதை அறிந்த அதிபர் சிறிசேன, வருகிற 16ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்தார். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்கா ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com