Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடுpage 4

தமிழ்நாடு

டி.டி.வி.தினகரனை தவிர்த்து, பிரிந்து சென்றவர்களில், வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள

b

டி.டி.வி. தினகரனை தவிர்த்து, பிரிந்து சென்றவர்களில் வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் ஏற்றுக்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க. சார்பில், புயல் பாதித்த மாவட்டங்களுக்கான நிவாரண உதவிகளின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டைக்கு 2 லாரிகளில் 30 டன் அரிசி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தார். புயலால் வீடு இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒருசிலர் வேறு கட்சிக்கு செல்வதாக வெளியான ... Read More »

மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனு மீது விசாரணை

supreme_court

மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு, மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது எனவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு ... Read More »

வட தமிழகத்தில் 13-ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு !

22

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகும் புயல் காரணமாக வட தமிழகத்தில் 13-ஆம் தேதி முதல் வலுவான காற்றுடன் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா ... Read More »

கும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்!

3

கும்பகோணத்தில், அபயம் தேடி நின்ற ராஜஸ்தான் மாநில இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியில் வேலைக்கான பயிற்சியில் சேர்வதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த 2ஆம் தேதி நள்ளிரவில் அங்கு வந்தார். கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வெளியே ஆட்டோ ஒன்றை பிடித்த இளம்பெண், தாம் தங்க வேண்டிய ஹாஸ்டலின் முகவரியைக் குறிப்பிட்டு ... Read More »

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி பயணம்

r

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. இதைதொடர்ந்து ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் சீரடையவில்லை. பிரதமர் மோடி புயல் சேதத்தை நேரில் பார்வையிட வரவில்லை என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி ... Read More »

தமிழகத்தின் இசைவின்றி மேகதாது அணை கட்டக்கூடாது!

1

தமிழகத்தின் இசைவின்றி மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக முதலமைச்சர் பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மேகதாது அணை கட்டும் பணியை கர்நாடக அரசு துவங்கவுள்ளதற்கும், ... Read More »

நெல் ஜெயராமன் உடலுக்கு ஸ்டாலின்-வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

3

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 50. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன், தமிழிசை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேனாம்பேட்டையில் ... Read More »

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்

2

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டுவந்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தநிலையில் இன்று காலை ... Read More »

 கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை 

1

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியின் குறுக்கே அணைகள் உள்ளிட்ட எந்தக் கட்டுமானங்களையும் கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவருவார் என கூறப்படுகிறது. இந்தத் ... Read More »

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-11 செயற்கைக்கோள்!

2

இணையதள வேகத்தை அதிகரிக்கப் பயன்படும், ஜிசாட் 11 செயற்கைக்கோள் ஏரியான்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தொலைத்தொடர்பு சேவைகளுக்காக 40 டிரான்ஸ்பாண்டர்களுடன் கூடிய, 5 ஆயிரத்து 854 கிலோ எடைகொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்நிலையில், பிரெஞ்ச் கயானாவில் உள்ள கோரு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, இன்று அதிகாலை 2.08 மணிக்கு ஜிசாட்-11 மற்றும் தென்கொரிய செயற்கைக்கோளுடன் ஏரியான்- 5 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின் ஜிசாட்11 செயற்கைக்கோள் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com