Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடுpage 30

தமிழ்நாடு

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை 35 லட்சம் ரூபாய் பறிமுதல்

1

லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடிபட்டார். இடைத்தரகர் செந்தில் முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் 35 லட்சம் ... Read More »

சென்னை-சேலம் இடையே அமையவுள்ள, 8 வழிச்சாலை திட்டத்தில் மாற்றம்!

road

சென்னை- சேலம் இடையே அமையவுள்ள பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திருத்தங்களைச் செய்துள்ளது. சென்னை- சேலம் இடையே 277 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் பாரத்மாலா பர்யோஜனா திட்டத்தின் கீழ் அமைய உள்ள இந்த சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டபோது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ... Read More »

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் -மு.க.ஸ்டாலின்

MK-Stalin

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்து கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். வெளிச்சம் தரும் மின் பகிர்மானக் கழகத்தையே, மின்துறை அமைச்சர் தங்கமணி இருட்டுக்குள் தள்ளிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குறைகூறியுள்ளார். பராமரிப்பு, பழுது என்ற போர்வையில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் ... Read More »

7-பேரின் விடுதலையில், ஆளுநர் உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் சீமான்

seeman

பேரறிவாளன் உள்ளிட்ட 7-பேரின் விடுதலையில், அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.மகாகவி பாரதியாரின் நினைவுநாள் மற்றும் இமானுவேல் சேகரனின் 61 வது நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அவர்களின் திருவுருவப் படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 7-பேர் விடுதலையில் அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் அன்பு-தென்னரசு, ... Read More »

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது -முதலமைச்சர்

dam

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு தெளிவாக இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியபோது, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தும், குடிநீருக்குக் கூட தண்ணீர் திறக்கவில்லை என்றும், மேகதாதுவில் அணைக் கட்டினால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் ... Read More »

குட்கா ஊழல் வழக்குஆலை உரிமையாளர் உள்பட, பேரிடம் சி.பி.ஐ. விசாரணை!

vbi

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குட்கா வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் சி.பி.ஐ. நடத்திய சோதனை மூலம் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ அனுமதி கோரியிருந்தது. மேலும்,5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியும் என சிபிஐ ... Read More »

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது-உச்ச நீதிமன்றம்!!

The National Green Tribunal office in New Delhi. Express Photo by Tashi Tobgyal New Delhi 080415

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் ... Read More »

வணிக வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை!

CM-Edappadi-palanisamy

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், வணிக வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையை முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்டார். பொறியியல் பட்டதாரிகளின் செயல்திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் தொடர்பாக, தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில்; நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னணி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி ... Read More »

இந்தியாவிலேயே தமிழகம் மருத்துவத்துறையில் முதலிடத்தில் உள்ளது-எடப்பாடி பழனிசாமி

CM-Edappadi-palanisamy

இந்தியாவிலேயே தமிழகம் மருத்துவத்துறையில் முதலிடத்தில் உள்ளதோடு, சாதனைகள் படைத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டியில், நீர் சேமிப்பு தொட்டி, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம் மற்றும் காத்திருப்போர் அறை ஆகியவற்றை கொண்ட புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து பார்வையிட்டார்.பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், சேலம் மாவட்டத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டது மற்றும் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டது குறித்த விவரங்களை ... Read More »

தி.மு.கவில் இணைத்துக் கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் மு.க.அழகிரி

MK Alagiri

தி.மு.கவில் இணைத்துக் கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார். மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி, வருகிற 5-ம் தேதி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பல்வேறு மாவட்ட ஆதரவாளர்களுடன் அவர் தினந்தோறும் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று 7-வது நாளாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி பேசுகையில், தி.மு.க.வில் தங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com