Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடுpage 10

தமிழ்நாடு

கஜ புயல் பாதித்த மாவட்டங்களை நாளை பார்வையிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி!

1

கஜ புயல் பாதித்த மாவட்டங்களை வரும் செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக அமைச்சர்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இன்றே புயல் பாதித்த மாவட்டங்களுக்கு தான் செல்ல இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், சேலத்தில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளை முடித்துச் செல்ல கால நேரம் போதாது என்றும், ஆய்வுக்கு ஒரு நாள் ... Read More »

சரக்கு லாரி மீது அவசர ஊர்தி வாகனம் மோதி விபத்து

accident

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது அவசர ஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீதாராம் மேடு தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளியை மேல்சிகிச்சைக்காக பெங்களுர் அரசு மருத்துவ மனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டு சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மீது ... Read More »

கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம்!

ops

கஜா புயல் பாதிப்பு குறித்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ். பி. வேலுமணி, காமராஜ், உதயகுமார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், ... Read More »

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஆஜராக டி.டி.வி.தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு!!

ttv

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தினகரனுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் குற்றப்பத்ரிக்கை தாக்கல் செய்தது. அதன்படி தினகரன் மீது மோசடி, சாட்சியங்களை கலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் செய்ததற்கான முகாந்தரம் உள்ளதாக ... Read More »

குட்கா வழக்கில் உயர் பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம் பெறவில்லை!

sta

குட்கா வழக்கில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் உயர் பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது, விசாரணை திசை மாறுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், குட்கா வழக்கில் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதில் கீழ்மட்ட அதிகாரிகள், குட்கா கம்பெனியைச் சேர்ந்தவர்களின் ... Read More »

மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு

22

தமிழகம், புதுச்சேரியில் வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையஇயக்குநர் பாலச்சந்திரன், கரைகடந்து அரபிக்கடலுக்குச் சென்ற கஜ புயல், அடுத்த 12 மணி நேரத்தில், மீண்டும் புயலாக வலுப்பெறும் என்று தெரிவித்தார். மேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்பதால் தமிழகத்திற்கு நேரடியான பாதிப்பு ஏதும் இல்லை எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், நாளை மாலை ... Read More »

நாகை மாவட்டத்தில் 44 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

10

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் புயல் நிவாரண முகாம்களாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தன. நாகையில் 26, வேதாரண்யத்தில் 61, மயிலாடுதுறையில் 12, தரங்கம்பாடியில் 13, சீர்காழியில் 14, கீழ்வேளூரில் 8, திருக்குவளையில் 3 இடங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 137 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆபத்தான பகுதி என கண்டறியப்பட்ட இடங்களில் அதிகாரிகள் நேற்று காலை முதலே மக்களை நிவாரண முகாம்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தி வந்தனர். ... Read More »

திருச்சியில் விமான சேவை பாதிப்பு

6

கஜா புயல் காரணமாக திருச்சியில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருச்சியில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலை 2-30மணிக்கு சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், திருச்சியில் தரையிறங்க முடியாமல் கொச்சினுக்கு திருப்பி விடப்பட்டது.இதே போல் சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 6-25 மணிக்கு தனியார் விமானம் வரும். இன்று காலை தாமதமாக 7-15 மணிக்கு அந்த விமானம் திருச்சி ... Read More »

6 மணி நேரத்தில் கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்

22

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.  தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை – வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ... Read More »

12 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன

5

கஜா புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்த போது நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்து விழுந்த இதுபற்றி மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கஜா புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தோம். இதற்காக புயல் பாதித்த திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க இரவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com