Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » தமிழ்நாடு தேர்வாணையத்தில் தமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லையா

தமிழ்நாடு தேர்வாணையத்தில் தமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லையா

33தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லை என கூறுவது வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தமிழக அரசுத்துறைப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வுசெய்யும் இரண்டாம் தொகுதிப் பணிகளுக்கானத் தேர்வுகள் சிலவற்றைத் தமிழில் எழுத முடியாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. செயலாளரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு கிராமப்புற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 11-ந்தேதி நடைபெற உள்ள இரண்டாம் தொகுதித் தேர்வாணையத் தேர்வுகளைத் தமிழகம் முழுவதும் 6 இலட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் எழுத உள்ளனர். இதில் 23 துறைகளுக்கு நடைபெற உள்ள தேர்வில் சமூகவியல், அரசியலறிவியல் உள்ளிட்டப் பல வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது என்று அவர் தெரிவித்தார். கற்பிக்க முயலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழில் வினாத்தாள் தயாரிக்கப் பேராசிரியர்கள் இல்லை என்றும், வடிவமைப்பாளர்கள் இல்லை எனக் கூறியுள்ளது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்.
மேலும், வினாத்தாள்களை தமிழில் மாற்றுவதற்காக அரசிற்கு அது கடினமானக் காரியமாக இருந்தால்; நாம் தமிழர் கட்சி தமிழக அரசுக்கு உதவி செய்ய தாயாராக உள்ளது என்று தெரிவித்த நாம் தமிழர் சீமான், தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழிலேயே வினாத்தாள்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com