Monday , 20 November 2017
Home » முக்கிய செய்திகள்: » தமிழ்நாடு இறகுப்பந்து சங்க தலைவரானார் அன்புமணி இராமதாஸ்…

தமிழ்நாடு இறகுப்பந்து சங்க தலைவரானார் அன்புமணி இராமதாஸ்…

Anbumani-Ramadossதமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் தலைவராக அன்புமணி இராமதாஸ் 2-வது முறையாக போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் ஆண்டுப்பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில், தமிழ்நாடு சங்கத்தின்  தலைவர் பதவிக்கான  தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சங்கத் தலைவராக அன்புமணி இராமதாஸ் 2வது  முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது, இந்திய இறகுபந்து சங்கத்தின் செயலாளர் திரு. புனியா சௌத்ரி, கர்நாடக இறகுப்பந்து சங்கத்தலைவர் N.C.சுதிர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக டேனியல் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், மீண்டும் தமிழ்நாடு இறகுபந்து சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு அனைத்து மாநில, மாவட்ட சங்க பொருப்பாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், தமிழக இறகுபந்தாட்ட வீரர்களை இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் முதல் ஒலிம்பிக் வரை பங்குபெற செய்து வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் என்று கூறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com