Tuesday , 16 January 2018
Home » தமிழ்நாடு

தமிழ்நாடு

ஆளுநரின் ஆய்வு நடத்தியதை பார்த்து ஸ்டாலின் அச்சப்படுகிறார் ; தமிழிசை சௌந்தர்ராஜன்…

tamilisai_fb__large

கோவையில் ஆளுநரின் ஆய்வை நடத்தியதை பார்த்து ஸ்டாலின் அச்சப்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளார்களை சந்த்தித்த அவர், ஆளுநர் மேற்கொண்ட ஆய்வினால் மாநில அதிகாரத்தை  அவர் கைப்பற்றிவிட்டதாக எதிர்கட்சிகள் தேவையில்லாமல் பெரிதுப்படுத்துகின்றனர். வரம்புக்குட்பட்டே அவர் செயல்படுவார், ஆளுநரின் வரம்பு என்னவென்று அவருக்கு தெரியும். அதனை மீறி அவர் செயல்படுகிறார் என்று தேவையில்லாத குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் முன் வைக்கின்றனர். இன்னும் பல மாவட்டங்களில் இவரது ஆய்வு தொடர வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. ஆளுநரின் இந்த ஆக்கப்பூர்வமான ... Read More »

ஆளுநர் ஆய்வு குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சனம் …

jawarhulla

ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதை ஏற்று கொண்ட எடப்பாடி அரசு மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசிற்கு கொத்தடிமைகளாகவே மாறிவிட்டதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளார்களை சந்தித்த அவர், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ள கருத்து ஏற்றுக் கொள்ளுமாறு இல்லை.  டிசம்பர் 6 மாநிலம் முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை பயங்கரவாத தாக்குதல் என்ற பெயரில் அனுசரித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். ஹஜ் பயணிகளுக்கு இடையூறு ... Read More »

போயஸ் தோட்ட இல்லத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருமான வரித்துறை சோதனை …

poes_3

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அவருக்கு மருத்துவம் ... Read More »

மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ; இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

Madras-High-Court-151215

இந்திய கடலோர காவல்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்யவும், தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகிய இருவரும் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போது இந்திய கடலோர கடற்படை வீரர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக மீனவர்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் எனவும், தமிழில் பேசக்கூடாது என கட்டாயப்படுத்தி கடுமையாக தாக்குதல் ... Read More »

பறவை மோதியதால் அவசரமாக விமானம் தறையிரக்கம்…

download

சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் மீது பறவை மோதியதால் அவசரமாக தறையிரக்கப்பட்டது. இன்று காலை சென்னை அண்ணா சர்வதேச விமானநிலையத்திலிருந்து கதார், தோஹாவிற்கு 134 பயணிகளுடன் புறப்பட்ட  இண்டிகோ விமானம்  புறப்படும் போதே அதன் மீது பறவை மோதியதால் மீண்டும் சென்னை விமானநிலையத்திலேயே அவசரமாக தறையிரக்கப்பட்டது அதிலிருந்த அனைத்து பயணிகளும் வேறு வேறு விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு அந்த விமானம் இரண்டு மணிநேரம் தாமதமாக மீண்டும் தோஹா புறப்பட்டு சென்றது. உடனடியாக விமானம் தரையிரக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது Read More »

அரசு இயங்காததால் நான் களமிறங்கிவிட்டேன் ; தமிழக ஆளுநர் பன்வாரிலால் ….

GOVERNOR9

உரிய ஆய்வுப் பணிகளை செய்வதன் மூலமாகத்தான் மாநில அரசின் செயல்பாட்டை கண்காணிக்க முடியும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து, கோவை மாநகராட்சியில் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்குள்ள  காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய ஆய்வுப் பணிகளை செய்வதன் மூலமாகத்தான் மாநில  அரசின் செயல்பாட்டை கண்காணிக்க முடியும் என்றும், தற்போது ... Read More »

அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் ; சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விளக்கம் …

Madras-High-Court-151215

மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் அகில இந்திய கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த ... Read More »

நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு…

06THRAMESWARAMBOATS_943387f

எல்லை தாண்டி தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன் பிடித்தாக நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை மீனவர்கள் 10 பேர் மீன் பிடிப்பதற்காக  படகு எண் 885 யில் கடலுக்கு சென்றுள்ளனர். பருத்தித்துறை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி அத்துமீறி மீன் பிடித்தாகக் கூறியும், தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தியாக கூறியும் மீனவர்கள் 10 பேரையும் கைது செய்ததோடு, விசை படகையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட ... Read More »

பாண்டிச்சேரி ; ப.ஜ.கவின் 3 நியமன ச.ம.உறுப்பினர்களின் நியமனம் செல்லாது …

vaithiyalindam

பாஜகவை சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரையும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்கள் மூன்று பேருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இதனிடையே அவர்களுக்கு சட்டசபையில் அலுவலகம், அடையாள அட்டை மற்றும் பேரவையில் இருக்கை ஒதுக்க வேண்டுமென மனு அளித்து இருந்தனர். இந்நிலையில் வரும் 23-ம் தேதி சட்டசபை கூடவுள்ள சூழ்நிலையில்  சபாநாயகர் வைத்தியலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் சட்டப்பேரவை செயலர் வின்செண்ட் ராயர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜகவை சேர்ந்த ... Read More »

திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த சரத்குமார் …

திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்ததற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், திமுக தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில், கருணாநிதியுடனான சந்திப்பு புகைப்படத்தை ஒன்றையும் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com