Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு » தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது, லோக் ஆயுக்தா மசோதா!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது, லோக் ஆயுக்தா மசோதா!

201807091936296682_Tamil-Nadu-enacts-Lokayukta-law_SECVPFலோக்ஆயுக்தா மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, லோக்ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மசோதாவை தாக்கல் செய்தார். 2013ஆம் ஆண்டில் மத்திய அரசால் இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தின் 63ஆம் பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலமும் லோக்ஆயுக்தா அமைப்பை நிறுவ வேண்டும். அதன்படி பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழகத்திற்கென்று லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ அரசு முடிவு செய்திருப்பதாக விளக்கவுரையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அறிமுக நிலையில் லோக்ஆயுக்தா மசோதாவிற்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிற்பகலில் 3.15 மணியளவில் லோக்ஆயுக்தா மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக-வின் நீண்ட நாள் கோரிக்கை என்ற வகையில், லோக் ஆயுக்தா மசோதாவை கொண்டுவந்தது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.
இருப்பினும், உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில் அவசர கதியில் மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், லோக்ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் முதலமைச்சர் வருவாரா என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றார். மசோதாவில் கூறப்பட்டுள்ள வடிவில் லோக்ஆயுக்தா அதிகாரம் இல்லாத அமைப்பாக இருக்கும் என்பதால், இந்த மசோதாவை செலெக்ட் கமிட்டிக்கு அனுப்பி விவாதித்த பின்னர் நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த கோரிக்கை ஏற்கப்படாததை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்ஆயுக்தா மசோதா பேரவையில் நிறைவேறியது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com