Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு » தமிழக-இலங்கை மீனவர் இடையே சென்னையில், 11-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இயலாது!

தமிழக-இலங்கை மீனவர் இடையே சென்னையில், 11-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இயலாது!

tamilnade secratriatதமிழக-இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை சென்னையில் 11-ம் தேதி நடத்த இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக-இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ந் தேதி இலங்கைக்கு செல்கிறார். அவர் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவரது பயணத்துக்கு முன்பாக தமிழக-இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியதையடுத்து இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி தமிழக- இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே வரும் 11-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்துவது பற்றி தமிழகம் தனது முடிவை தெரிவிக்கும்படி மத்திய அரசு கேட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மத்திய அரசுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகள் எழுதியுள்ள பதில் கடிதத்தில், மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை சென்னையில் 11-ம் தேதி நடத்த இயலாது என்று கூறியுள்ளார். வேறு தேதியில் பேச்சுவார்த்தையை நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com