Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி பயணம்

rதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. இதைதொடர்ந்து ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் சீரடையவில்லை. பிரதமர் மோடி புயல் சேதத்தை நேரில் பார்வையிட வரவில்லை என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி செல்கிறார். மாலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது விவகாரம் மற்றும் கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து நேரில் விளக்கம் அளித்து ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com