Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு » தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. அந்தக்கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் பிப்ரவரி 17-ந்தேதி தொடங்கியது. tamilnadu secratriatஅன்று ஆளுனர் ரோசய்யா உரை நிகழ்த்தினார். அந்த சட்டசபைக் கூட்டத்தொடர் இன்னும் முடிவு பெறவில்லை. தேதி குறிப்பிடாமல் அவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி 6-ந் தேதி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டு, ஆளுனர் உரை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைஇம்மாத இறுதியில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்படும். பின்னர் ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.இந்த சூழ்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பதாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்தக் கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் பற்றி விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள், தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அரசியல் ரீதியான விவகாரங்கள் ஆகியவை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com