Tuesday , 22 January 2019
Home » சினிமா » தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், வெளியானது காலா திரைப்படம்!

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், வெளியானது காலா திரைப்படம்!

kaala-posterபெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. அரசியல் வருகை குறித்து அறிவித்தப் பிறகு வரும் ரஜினியின் படம் என்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகள் தொடங்கின. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும காலா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதேபோல், சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளிலும காலா திரைப்படம் வெளியாகி இருக்கிறது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com