Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 17 May 2022
Home » தமிழ்நாடு » தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வழிநோக்கம் மற்றும் பாலமோர்குளம் பகுதிகளில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com