Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

rai6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில்,அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபாகர் சதீஷ் தெரிவித்தார். இதேபோன்று, குமரி மாவட்டத்திலும் ஒரு வாரத்துக்கு மேலாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெருஞ்சாணி அணை நிரம்பி வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பேச்சிப் பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டதால் பரளியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக குமரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com