Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » தமிழகத்தில் மின்வெட்டிற்கான வாய்ப்பே இல்லை அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டிற்கான வாய்ப்பே இல்லை அமைச்சர் தங்கமணி

thangamaniதமிழகத்தில் மின்வெட்டுக்கான வாய்ப்பில்லை என்றும், எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்யுமாறு, பிரதமர் மோடிக்கு கடந்த வாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இதையடுத்து, டெல்லி சென்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்திற்கு நாள்தோறும் 72-ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மின்வெட்டுக்கான வாய்ப்பில்லை என்றும், எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார். ஒடிசாவில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால், நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், அடுத்த 3 நாட்களில் தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை அனுப்ப மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com