Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

picஅரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கேன் குடிநீர் தயாரிப்பாளர் சங்கம் போராட்டத்தை கைவிட்டுள்ளது. இதே போல அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கத் தடை விதித்தும், வணிக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்தக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்ட தடையை அகற்றக் கோரி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் 4 ஆயிரத்து 100 லாரிகள் பங்கேற்றதால், சென்னையில் பல ஓட்டல்கள், வணிக வளாகங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் தமிழக அரசு சார்பில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை செயலாளர், குடிநீர் மேலாண்மை இயக்குநர், மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டதை அடுத்து, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஆனால் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூறினர்.அவர்களை மீண்டும் அழைத்து அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு சென்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டத்தை அடுத்து போராட்டத்தை விலக்கிக் கொள்ளவதாக தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com