Monday , 17 December 2018
Home » தமிழ்நாடு » தண்ணீர் திறப்பது காவிரி ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் !!

தண்ணீர் திறப்பது காவிரி ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் !!

vlcsnap-2018-07-17-10h55m33s247தமிழ்நாட்டில் காரைக்கால் உட்பட12 மாவட்டங்கள் ஒரு போக சம்பா சாகுபடி சுமார் 6.95 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ள நேரடி விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஜூலை 19ல் மேட்டூர் அனை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.ஜூன் முதல் வாரமே கர்நாடக அனைகள் நிரம்பிய நிலையில் காவிரி ஆணையம் உத்திர விட்ட 31 .25 டிஎம்சி தண்ணீரை விடுவித்திருந்தால் குறுவை சாகுபடி மேற்கொண்டிருக்க முடியும்.உபரி நீரை கர்நாடகா விடுவிப்பதால் காவிரி டெல்டா வடிகால் பகுதியாக மாறிவிட்டது வேதனையளிக்கிறது.
காவிரி சம்பந்தப்பட்ட அனைத்து அனைகளும் திறப்பது மூடுவது குறித்த நிர்வாக அதிகாரம் காவிரி ஆணையத்திற்க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் அதனை பின்பற்றிட தமிழக அரசு முன் வரவேண்டும். அரசின் முடிவை ஆணையத்திற்கு முன்மொழிந்து அதன் அனுமதியைப் பெற்று திறக்கப்பட வேண்டும் என்கிற முறையை உருவாக்க வேண்டும்.தானே முடிவெடுத்து அறிவிப்பது தற்போதைய நிலையில் உபரி நீரை திறப்பதற்கு மட்டுமே தமிழகத்திற்கு பொருந்தும். பற்றாக்குறைக்காலத்தில் நெருக்கடிகளை உருவாக்கும் மேலும் கர்நாடகாவின் தன்னிச்சை போக்கிற்கு சாதகமாக அமைந்துவிடும். என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிகள் 50சதகிதத்திற்கு மேல் துவக்கப்படவில்லை, தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் துவக்கப்பட்டுள்ள பணிகளும் முழுமையடையாமல் ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் ஜூலை 20ல் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.மீதப் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்தவொரு பணிகளும் முடிவு பெற வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை ஒப்ந்தக்காரர்களுக்கோ, வேளாண் குழுக்களுக்கோ பணம் வழங்கக் கூடாது.நபார்டு வங்கி இதனை கண்டிப்புடன் கண்காணித்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
சாகுபடி பருவ பயிர்கள் மற்றும் முறைகள் என்ன என்பது குறித்தான விபரத்தையும், தேவையான விதைகள் கிடைப்பதையும் அரசு வெளிப்படையாக உடன் அறிவித்திட வேண்டும் என் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com