Thursday , 25 May 2017
Home » இந்தியா » டெல்லி விரைந்தார் ஓபிஎஸ் …மோடியை சந்திக்க முடிவு

டெல்லி விரைந்தார் ஓபிஎஸ் …மோடியை சந்திக்க முடிவு

OPS_Modi_PTIடெல்லி சென்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ,பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்திக்கிறார் என்று கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன், மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் தேர்தல் கமிஷனில் இரட்டை இலை சின்னத்தைப் பெற கூடுதல் ஆவணங்களை வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.

பன்னீர்செல்வம் அணியை பாஜக இயக்குவதாக கூறிவரும் நிலையில், பிரதமர் மோடியை அவர் இன்று சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com