Thursday , 20 September 2018
Home » இந்தியா » டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலின் பெயர்

டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலின் பெயர்

kejriwalடெல்லி அரசின் மூன்றாமாண்டு நிறைவு விழா குறித்து கடந்த ஃபிப்ரவரி மாதம் அரசு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டிருந்த இந்த கூட்டத்தில் தாம் தாக்கப்பட்டதாகவும், ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தம்மை சரமாரியாக தாக்கியதாகவும் தலைமைச் செயலாளர் அன்{ பிரகாஷ் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்ததோடு தாக்குதல் சம்பவம் ஏதும் இடம்பெறவில்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், அன்{ தாக்கப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனீஷ் சிஸோடியா, ஆம் ஆத்மி கட்சியின் 11 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆளுநருடனான பிரச்சனையால் மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைபிடித்து வந்த டெல்லி அரசு தற்போது மீண்டுமொரு பிரச்சனையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com