Thursday , 21 March 2019
Home » இந்தியா » டெல்லியில் பழைய பொருள்சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து!

டெல்லியில் பழைய பொருள்சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து!

2டெல்லியில் பழைய பொருள் கிடங்கில் சிலிண்டர் வெடித்து, கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் உள்ள மோதி நகர் சுதர்சன் பார்க் பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் பழைய பொருள் சேமிப்புக் கிடங்கு இயங்கி வருகிறது. கிடங்கில் பணியாளர்கள் சிலர் இருந்த நள்ளிரவு நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com