Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » டெல்டா மாவட்டங்களில் வியடி,விடிய கன மழை!

டெல்டா மாவட்டங்களில் வியடி,விடிய கன மழை!

22 தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 26-ந் தேதியில் இருந்து 3 நாட்கள் வறண்ட வானிலை தமிழகத்தில் நிலவி வந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com