Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடு » டி.டி.வி.தினகரனை தவிர்த்து, பிரிந்து சென்றவர்களில், வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள

டி.டி.வி.தினகரனை தவிர்த்து, பிரிந்து சென்றவர்களில், வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள

bடி.டி.வி. தினகரனை தவிர்த்து, பிரிந்து சென்றவர்களில் வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் ஏற்றுக்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க. சார்பில், புயல் பாதித்த மாவட்டங்களுக்கான நிவாரண உதவிகளின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டைக்கு 2 லாரிகளில் 30 டன் அரிசி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தார். புயலால் வீடு இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒருசிலர் வேறு கட்சிக்கு செல்வதாக வெளியான தகவல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அது அவர்களது விருப்பம் என தெரிவித்த அவர், அதேசமயம், பிரிந்து சென்றவர்கள் அனைவரும் தங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என ஏற்கெனவே அழைப்பு விடுத்திருப்பதாகவும், டி.டி.வி.தினகரனை தவிர்த்த மற்ற அனைவருக்கும் இது பொருந்தும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com