Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடு » டி.எஸ்.பி.விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.தொடர்ந்து விசாரிக்கலாம்!

டி.எஸ்.பி.விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.தொடர்ந்து விசாரிக்கலாம்!

1டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்கலாம் என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி விஷ்ணுபிரியா அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது தந்தை ரவி தொடர்ந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை செய்து கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை. வழக்கை கைவிடுவதாக தெரிவித்திருந்தது.
இதற்கு எதிராக விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி எதிர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிவித்துள்ளது. விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்வதற்கு முன்பு, உயரதிகாரிகளிடம் பேசியது குறித்து அறிக்கையில் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com