Friday , 19 October 2018
Home » மாவட்டம் » ஈரோடு » டி.என்.பாளையம் ஒன்றியத்தில் மக்கள் நீதி மய்ய ஆலோசனை கூட்டம்

டி.என்.பாளையம் ஒன்றியத்தில் மக்கள் நீதி மய்ய ஆலோசனை கூட்டம்

vlcsnap-2018-07-17-10h37m55s187ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டமன்ற தொகுதி டி.என்.பாளையம் ஒன்றியத்தில் மக்கள் நீதி மய்ய ஆலோசனை கூட்டம் மற்றும் காமராஜர் பிறந்த நாள் தினம் அனுசரிப்பு – ஒன்றிய பொருப்பாளர் கதிர்வேல் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கள்ளிப்பட்டி அருகே உள்ள வேதபாறை நீர்த்தேக்கத்தை விரைந்து கட்ட வேண்டுமெனவும், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. டி.என்.பாளையம் ஒன்றியப் பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணியை சேர்ந்த பிரபு, ஆனந்த குமார், வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com