Tuesday , 22 May 2018
Home » இந்தியா » டிராபிக் ராமசாமி தர்ணா ; அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி போராட்டம் …

டிராபிக் ராமசாமி தர்ணா ; அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி போராட்டம் …

trafic_ramasamyமுதலமைச்சர் பழனிச்சாமி  வருகைக்காக போக்குவரத்துக்கு இடையூறாக  அனுமதியின்றி பேனர்கள்  வைக்கப்பட்டதாக கூறி அவற்றை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மார்ச் 31-ந்தேதி மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக நகர் முழுவதும் அனுமதியின்றி பிரமாண்ட வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணாநகர் பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வீட்டின் அருகே போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட வரவேற்பு பதாகைகள் இருப்பதை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அமைச்சர் வீட்டின் அருகேயுள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து பதாகைகளை எடுத்த மாநகராட்சியினர் அதனை எடுத்து செல்ல மறுத்ததால் மாநகராட்சி வாகனத்தின் முன்பாக அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார் டிராபிக் ராமசாமி. மேலும் பாதகைகளை கொண்டுசெல்லும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்ததோடு ஆளும்கட்சியினருக்கு சாதகமாக மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் செயல்படுவதாக தெரிவித்தார்.

 

Facebook Auto Publish Powered By : XYZScripts.com