Tuesday , 16 January 2018
Home » இந்தியா » டாக்சி டிரைவரை தாக்கிய மலையாள டிவி நடிகைகள் 3 பேர் கைது …

டாக்சி டிரைவரை தாக்கிய மலையாள டிவி நடிகைகள் 3 பேர் கைது …

கொச்சியில் ஆன்லைன் டாக்சி டிரைவரை தாக்கிய மலையாள டிவி நடிகைகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள  மாநிலம் கொச்சியில், டிவி நடிகைகள் கிளாரா சிபின் (28), ஷீஜாஅப்சல் (30). ஏஞ்சல்மேரி (36)  ஆகியோர் வைத்திலாவில் இருந்து நேற்று முன்தினம் ஆன்லைனில் ஷேர் டாக்சி புக்  செய்தனர். டாக்சி வரும்போது ஏற்கனவே அதில் ஒரு வாலிபர் அமர்ந்து  இருந்தார். மூன்று பேரும் பெண்கள் என்பதால் டிரைவர் ஷெபிக் அந்த வாலிபரை  முன்பக்க இருக்கைக்கு வருமாறு கூறியுள்ளார்.

Daily_News_2017_7241283655167ஆனால் நடிகைகள் அந்த வாலிபரை இறக்கிவிட  வேண்டும் என கூறினர். அதை டிரைவர் ஏற்கவில்லை. இதனால்  அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நடிகைகள் 3 பேரும் சேர்ந்து  டிரைவர் ஷெபிக்கை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து அவர் அளித்த  புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 நடிகைகளையும் கைது செய்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com